நிலத்துக்கு அடியில் இரகசிய அணு உற்பத்தி நிலையத்தை ஈரான் நிறுவி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம், அம்பலமாகி உள்ளது.
போர்டோ (Fordo) பகுதியில், நிலத்துக்கு அடியில் இரகசிய அணு ஆயுத திட்டத்துக்கான கட்டடங்களை கடந்த செப்ரெம்பர் மாதத்தில் இருந்து, ஈரான் அமைத்து வருகிறது.
‘மக்சார் தொழில்நுட்ப மையம்’ (Maxar Technologies ) என்ற நிறுவனம், கடந்த 11ம் நாள் தனது செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள குவோம் (Qom) நகரின் அருகே பூமிக்கடியில் இந்த இரகசிய அணு நிலையம் கட்டப்படுகிறது.
வான்வழி தாக்குதல், நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மலைகளுக்கு இடையே மிகவும் பாதுகாப்பான முறையில் இது கட்டப்படுவதாக கூறப்படுகிறது.