எல்லை விவகாரத்தில், நாட்டின் சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் அணுகுமுறை, அந்த நாட்டின் நோக்கங்களை பிரதிபலிக்கிறது.
இது புதிய இந்தியா. எந்த விதமான அத்துமீறல், ஆக்கிரமிப்பு அல்லது ஒருதலைப்பட்சமான செயல்களுக்கும், இந்த புதிய இந்தியா பொருத்தமான பதிலடியை கொடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.