கிழக்கு மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் தெரிவித்துள்ளார்.
63 வயதுடைய, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தொற்றாளரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தொற்றுநோய் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவர் மரணமடைந்துள்ளார் என்றும், மருத்துவர் சுகுணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.