கனடாவில் கொரோனா தடுப்பூசி விநியோகச் சங்கிலி பாதுகாப்பாக உள்ளதாக தேசிய தடுப்பூசி விநியோகச் செயற்றிட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் டேனி போர்ட்டின் தெரிவித்தார்.
அண்மையில் உளவுத்துறை நிறுவனங்கள் கனடிய தடுப்பூசி விநியோக சங்கலியை குலைப்பதற்கான சதிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிடவும், பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்தும் மொடோர்னா நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்யப்படவுள்ள தடுபூசிகள் இந்த வார இறுதியில் கனடாவை வந்தைடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.