சர்வதேச நிதி நிலையத்தை அமைக்கும் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக சீன துறைமுக பொறியியல் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்கள் சிறிலங்காவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளன.
கொழும்பு துறைமுக நகரத்திற்குள் மேற்கொள்ளப்படும் முதலாவது முதலீடு இதுவாகும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சிறிலங்காவுக்கான சீனத்தூதுவர் ஷீ ஜென்ஹொங் ஆகியோர் முன்னிலையில் பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், எல்.ஓ.எல்.சி குழுமத்தின் தொழில்நுட்ப முதலீட்டு வலையமைப்பு, சீன துறைமுக பொறியியல் கம்பனி ஆகிய நிறுவனங்கள் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.