தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாரதீய ஜனதா கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்று, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்று தெரிவித்துள்ள, தமிழக பாஜக தலைவர் முருகன், ஆனாலும், யாருடைய தலைமையில் தேர்தலை சந்திப்பது, முதல்வர் யார் என்பதை பா.ஜ.க தலைமை தான் தீர்மானிக்கும் என்றும், அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, விவசாயிகள் மத்தியில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ள நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.