மட்டக்களப்பு- மண்டூர் சங்கர்புரத்தில் உள்ள கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறிலங்கா காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
போர்க் காலத்தில், ஆலய வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக, கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட, இந்த தேடும் பணியின் போது, எந்த ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என்றும தகவல்கள் கூறுகின்றன.