கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள, விசுவமடு குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசுவமடு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும், பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களையுமே, அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
விசுவமடுக் குளத்தில் இருந்து வான்பாயும் நீர், பிரமந்தனாறு குளத்தை வந்தடைவதன் மூலம் பிரமந்தனாறு குளத்தின் நீர் அதிகரித்து வான் பாயக் கூடும் என்றும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.