உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு 100 மில்லியன் டொலரை வழங்குவதற்கு, சமஷ்டி அரசாங்கம் முன்வந்துள்ளது.
கொரோனா தொற்று சூழலில், குறைந்தளவு வளங்களுடன், அதிகமான தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ள நிறுவனங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவசரகால உணவுப் பாதுகாப்பு நிதியத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக இந்த நிதி வழங்கப்படும் என்று கனடாவின் விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கனடியர்களில் ஏழு பேரில் ஒருவர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக தரவுகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.