நேபாள பிரதமரின், பரிந்துரையை அடுத்து, நாடாளுமன்றம், ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் சர்மா ஒலி, இன்று காலை அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பரிந்துரை ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரிக்கு (bidhya devi bhandari)அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட, நேபாள ஜனாதிபதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளுக்கும், மே 10 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.