இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ (benjamin Netanyahu) முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொண்டு, தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடாவைத் தொடர்ந்து இஸ்ரேலும், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பிரதமர் நேதன்யாஹூ தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து, முதலாவது நபராக, பொது மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை போட்டு கொண்டார்.
இதன் மூலம், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட உலக தலைவர்களின் வரிசையில் அவரும் இடம்பிடித்துள்ளார்.