சிறிலங்காவில் இன்று கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, 176 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, 592 புதிய தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில், 554 பேர் பேலியகொட கொத்தணியையும், 38 பேர் சிறைச்சாலைக் கொத்தணியையும் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இதுவரை கண்டறியப்பட்டுள்ள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, 37 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.