மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக வெளியாகும் போலி செய்திகளை எதிர்க்கொள்ள விவசாயிகள் தரப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பாக, இணையதளங்களில் வெளியாகும் உண்மைக்கு மாறான செய்திகளை கண்காணித்து பதிலளிக்க, சுமார் 70 பேரைக் கொண்ட குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
விவசாயிகள் சார்பில் இதற்காக முகநூல், கீச்சகம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் கிஷான் எக்தா மோர்ச்சா என்ற பெயரில் உருவாக்கியிருக்கும் பக்கத்தில் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.