சட்டமன்றத் தேர்தலையொட்டிச் சிலரைக் கட்டாயப்படுத்திக் கட்சி தொடங்கச் சொல்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடந்த தி.மு.க., மா.செ. மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ‘தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். அர்ச்சுனன் குறி போல் தி.மு.க குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஆளுங்கட்சியிடம் நிறைய பணம் உள்ளது. தங்களை காப்பாற்றிகொள்ள பணத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது.
பணத்தை கொடுத்தும் அ.தி.மு.க தோல்வியடைந்துள்ளது. பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனங்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்.
10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க எதுவும் செய்யவில்லை. இந்த கோபம் மக்களிடம் உள்ளது. வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். வெற்றிக்கான சூத்திரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் கூறினார்.