அயோத்தியில் அமையவுள்ள பாபர் மசூதியின் மாதிரி படங்களை இந்திய இஸ்லாமிய கலாசார அமைப்பு வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்நிலப்பகுதியும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலத்தில் உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. இதற்கான அடிக்கல் ஜனவரி 26ல் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.