சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை மையமாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்துள்ளது.
‘ சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வரைவில், சிறிலங்கா ஐக்கிய நாடாக நிலையான அமைதி மற்றும் செழிப்பை நோக்கி முன்னேற வேண்டுமனால் புதிய அரசியலமைப்பு அவசியம் என்று முதலாவது வரியிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களும் சிறிலங்கா நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பலின, மொழி, மதங்களைக் கொண்ட ஐக்கியமான பிரிக்கப்படாத பிரிக்க முடியாதவொன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பானது, நாட்டில் வசிக்கும் வௌ;வேறு பட்ட மக்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தினை பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிடவும், சமத்துவம், சமஷ்டி, பிரிவினைவாதம் ஏற்பட்டமைக்கான சூழல் மற்றும் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்தல் ஆகிய நான்கு தலைப்புக்களின் கீழாக சுதந்திர த்தின் பின்னரான நிலைமைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.