தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, வட்ஸ்அப் ஊடாக போலியான தகவல்களைப் பகிர்ந் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இன்று நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றும், 31 வயதுடைய வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்படவர் ஆவார்.