மஹாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு, பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரவு ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என்றும் ஆனால், வரும் முன் காப்பதே சிறந்தது என்றும், முதல்வர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.