பிரதமர் மோடி அல்லது அமித்ஷா தங்களுடன் பேச வேண்டும் என விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
கடும் குளிரை பொருட்படுத்தாமல் டெல்லி எல்லையில் இன்று 25ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தால் டெல்லியின் எல்லைப்புற வீதிகளில் போக்குவரத்து முடங்கியது.
இது தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் சிங், உக்ராகான் கூறுகையில், “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டால், அந்த குழுவில் விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும்.
வேளாண் அமைச்சர் தோமர் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு விவசாய திருத்த சட்டம் தொடர்பாக முடி வெடுக்க எந்த அதிகாரமும் இல்லை.
இதனால் விவசாய சட்டம் தொடர்பாக பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோடுதான் நாங்கள் பேச வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக அத்துமீறல் நடக்கிறது இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.