.வி.விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விஷமத்தனமான பொய்ப் பிரசாரம் செய்கின்றனர் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அனைத்துலக சமூகத்தை ஒன்றுபட்டு அணுகுவதற்காக சமர்ப்பித்திருந்த ஆவணம் தொடர்பாகவே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் காலநீடிப்பு என்றோ, காலஅவகாசம் என்றோ, அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றுவது என்றோ எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சி.வி.விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நான் அப்படி ஒரு பிரேரணை வரைவைத் தான் முன்வைக்கின்றேன் என்று வேண்டுமென்றே விசமத்தனமான, பொய்யான பிரசாரத்தை முன்வைக்கின்றனர்” என்றும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.