ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 17 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு கனடாவில் இன்றையதினம் அதிக தொற்றாளர்கள் பதிவான பிராந்தியமாகவும் உள்ளதென கூறியுள்ளனர்.
இதேவேளை நாடாளவிய ரீதியில் 5இலட்சத்து 15ஆயிரத்து 314பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு 14ஆயிரத்து 290 மரணங்களும் சம்பவித்துள்ளன.