கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையின் போது அவை வெளியே வந்துள்ளது.
அது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று மீட்டனர். இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் 05, ரவைக்கூடு ஒன்று மற்றம் 30 ரவைகளும் காணப்பட்டன.
ஆயுதங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி இடம்பெறும் முகாமாக செயற்பட்டமையால் அந்த ஆயுதங்களும் அவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அறிவுறுத்தலிற்கு அமைவாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது