அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனாவினால் சுமார் 80 லட்சம் அமெரிக்கர்கள் வறுமை நிலையில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் நிலவி வந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.