கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டதே தவிர அதனை இந்தியாவுக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவில்லை என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் அவர் கூறியதோடு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டவர்களுக்கு வழங்க கடந்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கொழும்பு துறைமுகத்தின் முனையங்கள் உள்ளூர் முதலீட்டாளர்களினால் கூட அபிவிருத்தி செய்யப்படவில்லை. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய உள்ளூர் முதலீட்டாளர்கள் எவரும் முன்வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.