தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையில், அதிகளவில், கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, சமூத் சகோன் மாகாணத்தை முழுமையாக மூடுவதற்கு தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே, உள்ள இந்த மாகாணத்தில் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருள் சந்தையான மகாசாய் சந்தை உள்ளது.
இந்த சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அங்கு தொழிலாளர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.