பஞ்சாபில், பாகிஸ்தானின், ஆளில்லா விமானத்தை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
11 கைக்குண்டுகளுடன் பாகிஸ்தான் ஆளில்லா விமானம், குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், நுழைந்த போதே, இந்திய பாதுகாப்பு படையினர், அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அந்த ஆளில்லா விமானத்தில், இருந்த 11 கைக் குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.