மொடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அங்கீகரிக்க இன்னும் தரவுகள் தேவையாகவுள்ளதாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், கனேடிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நேரத்தில் மதிப்பாய்வை முடிக்க ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை வழங்க முடியாது. இருப்பினும் இது வரும் வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மொடர்னா நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக ஒருஇலட்சத்து 168 ஆயிரம் தடுப்பூசிகளை பெறுவதற்கு கனடா ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது