அனைத்து கனடியர்களும் சமூகப்பொறுப்புடன் நத்தார் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாகவே அதிகளவானோர் இம்முறை வீடுகளில் இருந்து கொண்டாட்டங்களில் பங்கேற்று வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் சூம், கூகுள் மீற் உள்ளிட்ட செயலிகள் ஊடாக உறவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிரும் அதேநேரம் அதிகளவில் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூகக் கட்டுப்பாடுகளை அடுத்து வரும் விடுமுறைக்காலத்திலும் பின்பற்றுமாறு கனடிய பொதுசுகாதரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.