திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோ மீற்றர் புகையிரத பாதை அமைத்தல் மற்றும் அஷ்ரப் துறைமுக விரிவாக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பில் துறை முகங்கள் கப்பற் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு, அப்பகுதியின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் அமைச்சர் தெரிவித்தார்.
துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ஒரு தொழில்துறை பேட்டையை கட்டுவதற்கும், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிக்கவும் திருகோணமலை மாவட்ட செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்குமாறு அமைச்சர் மேலும், தெரிவித்தார்.