ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலரும், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கபிசா (Kapisa) மாகாணத்தை சேர்ந்த பெண் உரிமைகளுக்காக போராடி வரும், 29 வயதுடைய, பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி (Freshta Kohistani) தனது வீட்டிற்கு வெளியே, சகோதரனுடன் நின்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.