ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்து, முடக்க நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ முதல்வரின் உத்தரவுக்கமைய இன்று அதிகாலை 12 மணி 01 நிமிடத்தில் இருந்து இந்த முடக்க நிலை நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ முழுவதற்குமான இந்த முடக்க நிலை ஜனவரி 9ஆம் நாள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒன்ராறியோவின் தென்பகுதியில் உள்ள 27 சுகாதாரப் பிரிவுகளிலும், ஜனவரி 27ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.