கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, கல்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, இன்று காலை தொடக்கம் மூடப்பட்டுள்ளது.
குறித்த பணிமனையில் கடமையாற்றும் சாரதி மற்றம் இரண்டு மருத்துவ மாதுக்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்படுடும் வரை, பணிமனையின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.