கொரோனா தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் தென் கொரியா கைச்சாத்திட்டுள்ளது.
இதனடிப்படையில், தென் கொரியா 16 மில்லியன் மக்களுக்கான தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளவுள்ளது.
நாட்டில் மூன்றாம் கொரோனா அலை பரவி வரும் நிலையில் பைசர் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தென் கொரிய பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த மக்களின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.