சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து கிடைத்த தகவல்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7 ஆம் திகதி, நிலவின் மேற்பரப்பில், விக்ரம் லேண்டர் என்ற கருவியைத் தரையிறங்க முயன்ற போது, விபத்துக்குள்ளாகி தொடர்பை இழந்தது.
எனினும் விண்கலத்தின் ஆயுள் ஓராண்டு இருந்ததால், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து இயங்கி வந்ததுடன், படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது.
நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்களும் பெறப்பட்டுள்ளன. சந்திரயான் 2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.