சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரிசோதனை முடிவுகள், இணையம் ஊடாக முன்பதிவு இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா காரணமாக இன்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15ஆம் திகதி கோயில் நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.