சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நீக்க வேண்டும் என்று, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவருக்குப் பதிலாக, முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்குமாறும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சு சரியாகச் செயற்படவில்லை என்றும், மக்கள் விரத்தி நிலையில் உள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சினை அழிக்காமல் பொருத்தமான ஒருவரிடம், அமைச்சின் செயலாளர் பதவியை வழங்குமாறும், முருத்தெட்டுவே ஆனந்ததேரர் சிறிலங்கா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.