திருவனந்தபுரம் பெருநகர முதல்வராக, 21 வயதுடைய இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆர்யா ராஜேந்திரன், இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆர்யா ராஜேந்திரனை, திருவனந்தபுரம் பெருநகர முதல்வராக மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், இந்தியாவின் முதல் இளம் மாநகர முதல்வர் என்ற பெருமையை இவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.