கனடாவில் தொடர்ச்சியாக நாடுகடந்த தொலைபேசி அழைப்பு மோசடிகளில் ஈடுபட்டதாக 25 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் பெறப்பட்ட பணத்தை பாதுகாக்கவும், மோசடி செய்யவும் இவர் வெளிநாட்டு மோசடியாளர்களால் நியமிக்கப்பட்டவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் வசிக்கும் அபிநவ் பெக்டர் என்ற குறித்த இளைஞன் மீது 5,000 அமெரிக்க டொலர் மோசடி, குற்றத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கனடிய காவல்துறை கூறியுள்ளது.