நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தடுப்பதற்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவை, அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரைக்கமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரான பிரசந்தா தலைமையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை, சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் நேபாளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று நேபாளத்திற்கு சென்றுள்ள அந்த குழுவினர், நான்கு நாட்கள் அங்கு தங்கி இருந்து, கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.