பிரித்தானியாவில் 85 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புதிய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வேல்சில் 60 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
லண்டனில் 2 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் தலைநகர் லண்டன், இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது