புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மதிப்பளிக்குமாறு சிறிலங்கா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்துச் செயற்படுவதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண, தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் சோதனைகளுக்கு சஜலர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை நிராகரித்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, இவ்வாறு ஒத்துழைக்க மறுத்த பலர் மீது அட்டலுகமவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.