கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் சட்டமூலத்துக்கு, மத்திய பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சில ஆண்கள், மற்றொரு மதத்தை சேர்ந்த பெண்களை காதலின் பெயரில், கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் கூறியிருந்தன.
இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசின், அமைச்சரவைக் கூட்டத்தில் ‘மத சுதந்திரம் சட்டமூலம் 2020’ எனப்படும் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தமாத இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.