ரொரன்ரோ பெருநகரப் பிரதேசத்தின் பெரும்பகுதியை மூடியிருக்கும் உறைபனியை நகர குழுவினர் அகற்றி வருகின்றனர்.
ரொரன்ரோவில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உறைபனி மூடிக் காணப்பட்டது.
இந்த நிலையில், உள்ளூர் சாலைகள், சுரங்கப் பாதைகளில், உறை பணியை அகற்றும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ரொரன்ரோ நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உறைபனியால் ரொரன்ரோவில் சாரதிகளை அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.