ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது, என்றும் ஹைதராபாத் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் என்றும், அவரைச் சந்திக்க ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஜினிகாந்த் நலம் பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் தி.மு.க தலைவர் முக. ஸ்டாலின், கமலஹாசன், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க தலைவர் முருகன் ஆகியோரும் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.