சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து வரவிருந்த விமானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் சுற்றலாப் பயணிகள் வருகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவில் இருந்து ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளுடன், நாளை வரவிருந்த ஏரோபுளொட் விமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானப் பயணம் வரும் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, விமான நிலைய, விமானசேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.