நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என்பது குறித்து கடந்த சில நாட்களாக மத்திய அரசு விரிவான தகவல்களை சேகரித்தாக கூறினார்.
அதன்படி கொரோனா தொற்றுத் தடுப்பில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னுரிமை பட்டியலில் இருப்பவர்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இலட்சத்தீவை தவிர, 681 மாவட்டங்களில் 49 ஆயிரத்து 604 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.