ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள, அறிக்கையின் ஆணையாளர் பணியகம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
அடுத்த வாரமளவில் இந்த அறிக்கைக்கான பதிலை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உள்ள தமது நிரந்தரப் பிரதிநிதி ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.