பிரித்தானியாவில் பரவியுள்ள புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் கனடாவின் ஒன்ராரியோவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
டர்ஹம் பிராந்தியத்தின் ஏதேச்சையாக நடைபெற்ற கொரோனா தொற்றுப் பரிசோதனையின் போதே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இரு நபர்களுக்கும் தொடர்ச்சியான பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று ஒன்ராரியோவின் தலைமை சுகாதார அலுவலர் வைத்தியர் பார்பரா யாஃப் (Barbara Yaffe) தெரிவித்துள்ளார்.
மேலும் அடையாளம் காணப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதற்கான தடமறியும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.