திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சனிபெயர்ச்சி விழா நாளை அதிகாலை நடைபெறுவதை முன்னிட்டு, திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
48 மணி நேரத்திற்கு முன்பாக பெறப்பட்ட, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை என்றும், விழாவில் கலந்து கொள்ள வருவோருக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.