அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற வெடிப்பிற்கு தற்கொலை தாக்குதலே காரணம் என சட்ட அமுலாக்கல் கருதுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கார்வெடித்துச் சிதறிய பகுதியில் மனிதஎச்சங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து விசாரணையாளர்கள் மரபணுபரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரின் வீட்டினை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது எனகருதுவதாக அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.